மறுகூட்டல்; இன்று கடைசி
திருப்பூர், பிளஸ் 1 தேர்வு முடிவு மே, 16ம் தேதி வெளியாகின. இத்தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவருக்கு, கடந்த 10ம் தேதி விடைத்தாள் நகல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, விபரங்களை பூர்த்தி செய்து இன்று மாலைக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒன்றுக்கு, 505 ரூபாய், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு, 305 ரூபாய், பிற பாடங்களுக்கு தலா, 205 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.