உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விசிலை விடு; விவசாயியை தொடு சீமான் பஞ்ச் டயலாக்

விசிலை விடு; விவசாயியை தொடு சீமான் பஞ்ச் டயலாக்

தாராபுரம்; திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி நா.த.க., வேட்பாளரை ஆதரித்து, தாராபுரத்தில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: மூன்று சிலிண்டர் ஜனவரியில் வழங்குவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதை எப்படி பார்க்-கிறோம் என்றால், செய்தி அரசியல், விளம்பர அரசியல். செயல் அரசியல், சேவை அரசியல் கிடையாது இவர்களுக்கு. அது தி.மு.க.வோ., - அ.தி.மு.க.வோ., - டி.வி.கே.வோ., யார் வந்தாலும் விளம்பர அரசியல் தான். ஜனவரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய்-மாமன் சீர், அதற்கு எல்லா பக்கமும் விளம்பரம். ஜனவரியில் கொடுப்பதற்கு இப்போதிருந்தே, பல நுாறு கோடிகளில் விளம்பரம். இதுதான் செய்தி அரசியல், விளம்பர அரசியல். இவ்வாறு பேசினார். பேச்சு நிறைவில் 'விசிலை விடு; விவ-சாயியை தொடு' என பஞ்ச் டயலாக் அடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி