மழையால் இடிந்த வீடு தம்பதிக்கு நிவாரணம்
முத்துார்: திருப்பூர் மாவட்டம் முத்துார் பேரூராட்சி, 12வது வார்டு சுப்பிரம-ணியபுரம் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம், 60; இவரின் மனைவி நாச்சம்மாள். தொடர் மழையால் வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது.இதில் இருவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்நிலையில் காங்-கேயம் வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்-கொண்டனர். முத்துார் பேரூராட்சி சார்பில், பாதித்த குடும்பத்தின-ருக்கு அரிசி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருள் வழங்கப்பட்-டது.