உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி தடுப்பணையில் ஆகாயத்தாமரை அகற்றம்

கொடிவேரி தடுப்பணையில் ஆகாயத்தாமரை அகற்றம்

கோபி :பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக, தண்ணீர் தேங்கி நிற்கும், தடுப்பணையின் மேற்பகுதியில், ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் ஆக்கிரமித்திருந்தது. இதனால் தடுப்பணை வழியாக சீராக தண்ணீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் பாசன உதவியாளர்கள் அடங்கிய குழுவினர், ஆகாயத்தாமரை செடிகளை நேற்று அகற்றினர். இதனால் நேற்று மதியம், 12:30 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !