பாசனத்துக்கு முன்னதாக தண்ணீர் திறக்க கோரிக்கை
ஈரோடு :கொ.ம.தே.க., பொது செயலாளர் ஈஸ்வரன், தமிழக அரசு மற்றும் ஈரோடு கலெக்டருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது: மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனங்களுக்கு ஆண்டு தோறும் ஆக., மாதங்களில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம், 45,000 ஏக்கர் பாசன பகுதிகள் பயன் பெறும். தற்போது கொங்கு மண்டலத்தில் வெயில் அதிகமாக உள்ளதால், விவசாயம், கால்நடைகள், குடிநீருக்கு சிரமம் ஏற்படுகிறது. கடந்தாண்டு கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மே, 15ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதுபோல இந்தாண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.