உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு

ஈரோடு, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, துறை அலுவலர்களுடன் எல்லப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை ஆய்வு செய்து, உற்பத்தியாளர்களிடம் குறை, கோரிக்கைகளை கேட்டறிந்தார்.வில்லரசம்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், வீடுகளில் துாய்மை பணியாளர்கள் மக்கும், மக்காத குப்பை சேகரிப்பு பணி, கொசு ஒழிப்பு பணியாளர்களின் பணிகளை ஆய்வு செய்தார். கதிரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் உணவை சுவைத்து பார்த்தார். பள்ளியில் வழங்கப்படும் குடிநீரில் கலந்துள்ள குளோரின் அளவை, நீர் மாதிரி எடுத்து ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ