உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொடக்குறிச்சி வேண்டும் காங்., சார்பில் தீர்மானம்

மொடக்குறிச்சி வேண்டும் காங்., சார்பில் தீர்மானம்

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., கமிட்டியின் கிராம காங்., கமிட்டி, பேரூர் கமிட்டி தலைவர்களிடம், நிர்வாகிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா, பூந்துறையில் நடந்தது.மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியை காங்., கட்சிக்கு வழங்கிய தி.மு.க., மீண்டும் எடுத்து கொண்டது. எனவே மொடக்குறிச்சி தொகுதியை, 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிடம் இருந்து கேட்டு பெற வேண்டும்.வரும், 27 முதல் கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை தெருமுனை பிரசாரம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ