உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருப்பூரில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தீர்மானம்

திருப்பூரில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தீர்மானம்

காங்கேயம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட மாநாடு, காங்கேயம் சீரணி அரங்கில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, மாநில பொது செயலாளர் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஞானசேகரன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் பேசினர். நிர்வாக வசதி மற்றும் மக்களின் வசதிக்காக, காங்கேயம் வட்டத்தை இரண்டாக பிரித்து, வெள்ளகோவில் தலைமையாக கொண்டு தனி வட்டம் அமைக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பொறியியல் கல்லுாரி அமைக்க வேண்டும். திருப்பூர் மாநகரம் தொழில் நகரமாக வளர்ந்து இருப்பதால் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை