குடும்ப நல நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்த ஓய்வு பெற்ற அலுவலர் கூட்டத்தில் தீர்மானம்
ஈரோடு :ஈரோடு மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா, பேரவை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கலெக்டர் கந்தசாமி, நினைவு பரிசு வழங்கி பேசினார். அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியை, 300 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். ஓய்வூதியர்கள் மறைவுக்கு பின், அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் மாதந்தோறும் பெறும் ஓய்வூதியத்துக்கு, வருமான வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கு, 1,000 ரூபாய் பொங்கல் கருணை தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட தலைவர் குமாரசாமி, முகம்மது இஸ்மாயில், சங்கரன், கருவூல அலுவலர் சேசாத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.