உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்

வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு, உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மதியம், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் குமரேசன் கோரிக்கை குறித்து பேசினார்.உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்துவிட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். தொடர்ந்து இம்முகாம் நடப்பதால், பிற பணிகளில் முழு கவனம் செலுத்துதல், விரைந்து முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை