மேலும் செய்திகள்
சாலை, குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை தர அறிவுரை
21-Sep-2025
ஈரோடு,ஈரோட்டில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.இதில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: வடகிழக்கு பருவமழையின்போது மழை, வெள்ளம் போன்ற இயற்கை இன்னல்களை எதிர் கொள்ள, அனைத்து துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல் மீட்பு குழு, நிவாரண முகாம் மேலாண்மை குழு, சிறப்பு குழு அமைக்க வேண்டும். அதற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமித்து, நீர் நிலை, நீர் வழித்தடங்கள், வடிகால், கால்வாய்களை கண்காணிக்க வேண்டும். தேவையான இடங்களில் முன்னதாக துார்வாரி பராமரிக்க வேண்டும்.அரசு, தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், எண்ணெய் நிறுவனங்கள், தொலை தொடர்பு நிறுவனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் இருப்பு உள்ளதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். பேரிடர் கால காவலர்கள், முதல் நிலை மீட்பாளர்கள், தகவல்களை தெரிவிக்க ஏதுவாக தாசில்தார் அலுவலகத்துடன் தொடர் எண்ணில் இருக்க வேண்டும். மின்தடை ஏற்படாதபடி ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து துறைகளும், தங்களுக்கான பணிகளை முன்னதாகவே செயல்படுத்த துவங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா, மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
21-Sep-2025