உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெப்பிலி ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தல்

வெப்பிலி ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தல்

ஈரோடு, சென்னிமலை அருகே, ரேஷன் கடையில் இருந்து, அரிசி கடத்தியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட, எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள வெப்பிலி ரேஷன் கடையில் இருந்து, அரிசி மூட்டைகளை வெளியே எடுத்து ஆம்னி வேனில் அடையாளம் தெரியாத இருவர், நேற்று காலை ஏற்றுவது தொடர்பான வீடியோ வைரலானது. தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், ரேஷன் கடையில் விசாரணை நடத்தினர். இதில், 300 கிலோ அரிசி கடையில் இருந்து, எடுத்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை