உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உண்டியலை உடைத்து கோவிலில் திருட்டு

உண்டியலை உடைத்து கோவிலில் திருட்டு

ஈரோடு, ஈரோடு அருகே அவல்பூந்துறை-வெள்ளோடு செல்லும் வழியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவிலை திறக்க, வழக்கம்போல் பூசாரி நேற்று காலை கோவிலை வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது.அறச்சலுார் போலீசார் ஆய்வில், சுவர் ஏறி குதித்து இருவர் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய காட்சி, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தது. இருவரும் முகமூடி அணிந்து, தொப்பி அணிந்திருந்தனர். உண்டியலில், 3,000 ரூபாய் இருந்திருக்கலாம் என தெரிகிறது. களவாணிகளை போலீசார் தேடி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி