சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில் ரூ.26 லட்சம் காணிக்கை
சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார் முன்னிலையில், நிரந்தர உண்டியல் மற்றும் திருப்பணி உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியலில் ரொக்கமாக, 25.57 லட்சம் ரூபாய், 78 கிராம் தங்கம்,3,150 கிராம் வெள்ளி கிடைத்தது. திருப்பணி உண்டியலில் ரொக்கமாக, 42 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், தனியார் கல்லுாரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.