மேலும் செய்திகள்
ரூ.1.87 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
04-Sep-2024
கொடுமுடி: கொடுமுடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. கொடுமுடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 205 நிலக்கடலை மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 67.60 ரூபாய், அதிகபட்சமாக, 74.50 ரூபாய், சராசரியாக, 73.30 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 70.27 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலை, ஐந்து லட்சத்து, 4,665 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. இத்தக-வலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார்.
04-Sep-2024