உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு பின்னணியில் ஆளுங்கட்சியினர் கடைக்காரர்கள் டீசன்ட் அட்டாக்; அதிகாரிகள் டீசன்ட் அப்ரோச்!

பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு பின்னணியில் ஆளுங்கட்சியினர் கடைக்காரர்கள் டீசன்ட் அட்டாக்; அதிகாரிகள் டீசன்ட் அப்ரோச்!

பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு பின்னணியில் ஆளுங்கட்சியினர்கடைக்காரர்கள் 'டீசன்ட் அட்டாக்'; அதிகாரிகள் 'டீசன்ட் அப்ரோச்'!ஈரோடு, அக். 29-பயணிகளின் புகாரால் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் முளைத்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். கடைக்காரர்களோ அகற்ற மறுத்ததுடன், ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலரின் பெயரைக் கூறி 'டீசன்ட் அட்டாக்'கில் ஈடுபட, திகைத்துப்போன அதிகாரிகள், 'டீசன்ட் அப்ரோச்'ஆக, அமைதியாக நடையை கட்டினர். ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருந்த பலர், நடைபாதை, பஸ் வெளியே செல்லும் வழிப்பாதையை ஆக்கிரமித்ததால், பயணிகள் சிரமப்பட்டனர். நாளிதழ் செய்தி எதிரொலியால் கடைகளின் ஆக்கிரமிப்பு கடந்த வாரம் அகற்றப்பட்டது. ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், ஆளும்கட்சி நிர்வாகிகளின் தயவால், மீண்டும் ஆக்கிரமிப்பு தலை துாக்கி விட்டது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலேயே ஜவுளிக்கடை, பழக்கடை, பூக்கடை என பல கடைகள் முளைத்துள்ளன. இவற்றால் பஸ் டிரைவர்களுக்கு மட்டுமின்றி, நடந்து செல்லும் பயணிகளும் பாதிக்கின்றனர். இந்த கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு, மத்திய பஸ் ஸ்டாண்டில் இன்று (நேற்று), மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வைத்த கடைகளை அகற்ற உரிமையாளர்களை அறிவுறுத்தினோம். அவர்களோ ஆளும்கட்சி நிர்வாகிகள் சிலரின் பெயர்களை கூறி அவர்களிடம் பேசிக்கொள்ளுங்கள். நாங்கள் கடைகளை அகற்ற மாட்டோம் எனக்கூறி விட்டனர். இதனால் ஒன்றும் செய்ய முடியாமல், அதிகாரிகள் திரும்பி விட்டனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ