உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 'வெற்றி வீடு திட்டம்' உள்ளிட்ட வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் அவசர கதியை காட்டாமல், பயனாளிகள் தேர்வுக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களை டி.ஏ.பி.எஸ்., ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வி.பி.ஜி.ராம்-ஜி திட்டத்தில் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ