ஊரக வளர்ச்சி ஊழியர் மாநாடு
ஈரோடு: ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின், 18வது மாநாடு நேற்று நடந்தது. சங்க தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சங்கக்கொடி ஏற்றி வைத்தார். மாநில சம்மேளன துணை செய-லாளர் ரத்தினக்குமார் மாநாட்டை துவக்கி வைத்தார். பொது சுகாதார பணிகளை தனியாரிடம் ஒப்பந்த அடிப்டையில் விடுவதை கைவிட வேண்டும். கோபி, சத்தி, பவானி, புளியம்-பட்டி நகராட்சிகளில் சுகாதாரப் பணிகளை ஒப்பந்த முறையில் கொடுத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 14 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்-பட்ட, 225 கிராம ஊராட்சிகளில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவின்படி, 492 ரூபாய், நகராட்சியில் பணிபுரிபவர்களுக்கு, 646 ரூபாய், பேரூ-ராட்சி தொழிலாளர்களுக்கு, 569 ரூபாயும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.