உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துாய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் போனஸ் பணத்தை திருப்பி தந்ததால் பரபரப்பு

துாய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் போனஸ் பணத்தை திருப்பி தந்ததால் பரபரப்பு

சத்தியமங்கலம், தீபாவளி போனஸ் குறைவாக கொடுத்ததால், துாய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்திய பின், போனஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டு சென்றனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில், 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தீபாவளி போனஸ் கேட்டு நகராட்சி தலைவரிடமும், நேற்று முன்தினம் நகராட்சி கமிஷனர் வெங்கடேஷ்வரனிடமும், 3,000 ரூபாய் தரக்கோரி உள்ளாட்சி பணியாளர் சங்க தலைவர் ஸ்டாலின் சிவகுமார் தலைமையில் மனு அளித்தனர். 3,000 ரூபாய் தருவதாக ஒப்பந்த நிறுவனம் கூறியது.இந்நிலையில் நேற்று பணியாளர்களுக்கு இனிப்பு, காரம், பணியாரக்கல் மற்றும் போனஸ் தொகை வழங்கினர். பையை வாங்கி பிரித்து பார்த்ததில், 1,500 ரூபாய் மட்டுமே இருந்தது. 3,000 ரூபாய் தருவதாக கூறி விட்டு குறைவாக கொடுத்துள்ளதாக கூறி, நேற்று மதியம், 1:00 மணியளவில் பெண்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி முன் சாலையில் அமர்ந்து, 1:15 மணி வரை மறியலில் ஈடுபட்டனர்.சத்தியமங்கலம் போலீசார், நகராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறி, அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். பின்பு நகராட்சி மெயின் கேட் முன் குப்பை வண்டிகளுடன், துாய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து முற்றுகையிட்டனர். 3,000 ரூபாய் தருவதாக கூறி விட்டு, 1,500 ரூபாய் கொடுத்து ஏமாற்றி விட்டனர் என கூறி, தீபாவளி போனஸ் பையை, கமிஷனரிடம் திருப்பி கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ