உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் இன்று இரவு நடக்கும் செகண்ட் சேல்ஸ் ஜவுளி விற்பனை

ஈரோட்டில் இன்று இரவு நடக்கும் செகண்ட் சேல்ஸ் ஜவுளி விற்பனை

ஈரோடு:தீபாவளியை பொதுவாக அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருப்பதை அறிவோம். ஆனால் தீபாவளி இரவை எதிர்பார்த்து, ஈரோடு மாநகர மக்கள் காத்திருக்கின்றனர்.ஈரோடு மாநகரில் பல ஆண்டுகளாக தீபாவளியன்று இரவு, 10:00 மணிக்கு துவங்கி மறுநாள் அதிகாலை, 4:30 மணி வரை பிராண்டட் ஜவுளி விற்பனை நடக்கிறது. ஆர்.கே.வி.சாலை, நேதாஜி சாலை, காவிரி சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்து ஜவுளி கடைகளும் சேகண்ட் சேல்சை துவங்குகிறது. ஒவ்வொரு கடை முன்பும் இந்த விற்பனை நடக்கும். இதனால் பிராண்டட் ஜவுளிகளை, மக்கள் குறைந்த விலைக்கு வாங்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.கடந்தாண்டு பிராண்டட் ஜவுளிகளை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்தாண்டும் செகண்ட் சேல்ஸ் செய்ய, ஈரோடு டவுன் போலீசில், 20க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. அனுமதி பெறாதவர்களும் ஜவுளிக்கடை போடுவது வழக்கம். கடந்தாண்டை போல் இந்தாண்டும் ஈரோடு மட்டுமின்றி சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பிராண்டட் ஜவுளி ரகங்களை வாங்க திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி