உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணிக்கம்பாளையம் மெயின் சாலையை சூழ்ந்த கழிவுநீர்

மாணிக்கம்பாளையம் மெயின் சாலையை சூழ்ந்த கழிவுநீர்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 18வது வார்டு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில், பாதாள சாக்கடைக்கான மேன் ேஹால் அடுத்தடுத்து இரண்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, மேன்ஹோல் மூடிகள் இரும்பில் மாற்றும் பணிகள் நடந்து முடிந்-தது. இந்நிலையில், நேற்று காலை பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரண்டு மேன்ஹோல்கள் வழியாக கழிவுநீர் வெளியேறியது. இதனால் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கியதால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு நடந்து சென்ற மாணவ,மாணவியர் சிரமத்-திற்கு உள்ளாகினர். இதேபோல் வாகன ஓட்டிகளும் அவதியுற்-றனர். சமீபகாலமாக, நகரின் பல்வேறு இடங்களிலும் மேன்-ஹோல்கள் வழியாக கழிவுநீர் வெளியேறுவது தொடர் கதையாக உள்ளது. எனவே, சாக்கடை துார்வாரும் பணிகளை மாநகராட்சி செய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ