உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றகடைக்காரர்களுக்கு மே 3 வரை அவகாசம்

பவானியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றகடைக்காரர்களுக்கு மே 3 வரை அவகாசம்

பவானி, பவானியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் பூக்கடை பிரிவு பகுதியில் இருந்து, பவானி புது பஸ் ஸ்டாண்ட் வரை, ௧ கி.மீ., துாரத்துக்கு மேல், சாலையின் இருபுறமும், 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.இதில் பெரும்பாலான கடைகள், சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக, நெடுஞ்சாலைத்துறைக்கு நிறைய புகார் சென்றது. இந்நிலையில் பவானியில் இருந்து ஈரோடு, சேலம், கோவை செல்லும் அனைத்து வாகனங்களும், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கூடுதுறை வழியாக உள்ள மெயின் ரோட்டில்தான் ெசல்ல வேண்டும். எனவே ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்கள், தாங்களே அகற்றிக் கொள்ளுமாறு, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் சேகர், ஒரு மாதத்துக்கு முன்பே அறிவித்திருந்தார்.இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பூக்கடை பிரிவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொக்லைன் இயந்திரத்துடன் நேற்று சென்றனர். அப்போது திரண்ட, ௫0க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள், ஒரு வாரம் அவகாசம் கொடுத்தால், தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம் என்றனர்.அதற்கு நெடுஞ்சாலை துறையினர் சம்மதிக்காததால், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து பவானி போலீசார், நகர்மன்ற தலைவர் சிந்துாரி வந்தனர். கடைக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் மே, 3ம் தேதிக்குள், மேட்டூர்-ஈரோடு மெயின் ரோட்டில் கடை வைத்திருப்போர், தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் பவானியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை