உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் கடையடைப்பு; வியாபாரிகள் அறிவிப்பு

கோபியில் கடையடைப்பு; வியாபாரிகள் அறிவிப்பு

கோபி: கோபியில் வரும் ஜன.,3ல், கோபி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதுகுறித்து கோபி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி கூறியதாவது: மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாதரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகப்படுத்திய வரிகளை குறைக்க வேண்டும். இதை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதன்படி கோபியில், 2,500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை