உள்ளூர் செய்திகள்

சிவபக்தை மாயம்

ஈரோடு: ஈரோடு, சொக்கலிங்கம் வீதியை சேர்ந்தவர் மாணிக்கம், 51; கனரா வங்கி கிளை நகை மதிப்பீட்டாளர். மனைவி மனோரஞ்-சிதம், 51; இவர்களின் மகள் திவ்யாஸ்ரீ. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணி செய்கின்றனர். கடந்த, 17ல் வேலைக்கு சென்ற மனோரஞ்சிதம் மாயமானார். மொபைல்-போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.மனோரஞ்சிதம் சிவதீட்சை பெற்றவர். ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று ஏதாவது ஒரு கோவிலில் சேவை செய்வது வழக்கம். மாணிக்கம் மது குடிப்பார். இதை கண்டித்ததால் தம்பதி இடையே சண்டை இருந்தது. இந்நிலையில் மனோரஞ்சிதம் மாயமாகியுள்ளார். வீட்டில் அவர் எழுதிய ஒரு கடிதம் கிடைத்-தது. அதில், 'இனி எனக்காக வாழப்போகிறேன். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் என் மனதை இரும்பாக்கிவிட்-டது. இங்கு வாழ விரும்பவில்லை,' என எழுதியுள்ளார். புகாரின் அடிப்படையில் ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை