உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்; டி.என்.பாளையம் விவசாயிகள் அச்சம்

மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்; டி.என்.பாளையம் விவசாயிகள் அச்சம்

டி.என்.பாளையம்: -டி.என்.பாளையம் பகுதிகளில் மாடுகளை, பெரியம்மை நோய் தாக்கி வருவதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.டி.என்.பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான டி.ஜி.புதுார், கொங்கர்-பாளையம், பங்களாப்புதுார், புஞ்சை துறையம்பாளையம், கள்ளிப்பட்டி, உள்-ளிட்ட பகுதிகளில் நாட்டு மாடு, ஜெர்சி மாடுகளை விவசாயிகள் அதிகம் வளர்த்து வருகின்றனர். தற்போது மாடுகளை என்.எஸ்.டி., எனப்படும் பெரி-யம்மை நோய் தாக்கி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நோயை தாக்குப்பிடிக்க முடியாமல் கன்றுகள் இறப்பது அதிகரித்துள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: பெரியம்மை நோய்க்கு இதுவரை முறையான தடுப்பூசி இல்லை. எங்கள் பகுதியில் தற்போது பெரி-யம்மை நோய் மாடுகளை தாக்கி வருகிறது. இந்நோய் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை தேவை. தற்போது சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறையில் சிகிச்சை செய்து வருகிறோம். புஞ்சை துறையம்பாளையத்தில் ஒரே விவசாயிக்கு சொந்தமான இரு கன்றுகள், உள்பட மூன்று கன்றுகள், பெரியம்மை நோய்க்கு பலியான நிலையில், தற்போது ஒரு கன்றுக்குட்டி நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை