உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சொக்கநாதர் கோவில் படித்துறை சேதம்; சீரமைக்க கோரிக்கை

சொக்கநாதர் கோவில் படித்துறை சேதம்; சீரமைக்க கோரிக்கை

பவானி: காவிரிக்கரையில் அமைந்துள்ள கோவிலின் படித்துறை சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளதால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.அம்மாபேட்டை காவிரிக்கரையில், 800 ஆண்டு பழமையான சொக்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய தினங்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கும். இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, 20க்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதில்லாமல் பக்தர்கள், காவிரியில் தீர்த்தம் எடுத்து செல்வதும், புனித நீராடி செல்வதும் வழக்கம். சில தினங்களுக்கு முன், காவிரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள படித்துறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் படித்துறையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. படித்துறையில் புனித நீர் எடுக்க சென்ற ஒரு பக்தர் கல் தடுக்கி விழுந்து காயமடைந்தார். தற்போது மார்கழி மாதம் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. அதேசமயம் படித்துறை இடிந்தது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கூறியும் நடவடிக்கை இல்லை என, பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே ஈரோடு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை