உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு சிலவரி செய்திகள்

ஈரோடு சிலவரி செய்திகள்

மே தின விழா கொண்டாட்டம்சென்னிமலை,: -சென்னிமலை தினசரி மார்க்கெட் அருகே அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, மே தின விழாவை நேற்று கொண்டாடினர். ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சென்னிமலை ஒன்றிய அண்ணா தொழிற்சங்க தலைவர் மாரப்பன் வரவேற்று பேசினார், நகர செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். சங்க பெயர் பலகையினை திறந்து வைத்து சுமை தொழிலாளர், 50க்கும் மேற்பட்டோருக்கு முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ் துண்டு அணிவித்து கவுரவித்தார்.மணல் கடத்திய லாரி பறிமுதல்சென்னிமலை: புவியியல் மற்றும் கனிம வளத்துறை பறக்கும் படை அதிகாரி கவிதா தலைமையிலான குழுவினர்,-சென்னிமலையில் அரச்சலுார் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியை சோதனை செய்தபோது ஆறு யூனிட் மணல் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், லாரியை பறிமுதல் செய்து, சென்னிமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். லாரியை ஓட்டி வந்த டிரைவர் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ராஜீவ் காந்தி, 36, மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.ஓவர் குடியால் பலிஈரோடு, மே 6-தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லுாரை சேர்ந்தவர் வேலு, 31; ஈரோடு அருகே நாராயணவலசில், ஒரு மெஸ்சில் தங்கி, சப்ளையராக வேலை பார்த்தார். கடந்த, 3ம் தேதி கடை விடுமுறை என்பதால், அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு, அறையில் படுத்து வேலு துாங்கினார். நேற்று முன்தினம் வேலைக்கு வராததால், வேலுவை எழுப்ப கடை ஊழியர்கள் சென்றனர். மயக்க நிலையில் கிடந்தவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.மகள் மாயம்: தாய் புகார்ஈரோடு: ஈரோடு, மூலப்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி மாயகண்ணன்-கலைவாணி மகள் அர்ச்சனா, 19; தனியார் கல்லுாரி பி.எஸ்.சி., மாணவி. கடந்த, 1ம் தேதி மாலை, அருகிலுள்ள பாட்டி வீட்டுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாய் கலைவாணி புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார், இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.ரயில் மோதி வாலிபர் பலிஈரோடு-கொடுமுடி-ஊஞ்சலுார் ரயில்வே ஸ்டேஷன் இடையே, தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த வாலிபருக்கு, 28 வயது இருக்கும். தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது திருச்சி--ஈரோடு பாசஞ்சர் ரயில் மோதி இறந்திருப்பது தெரியவந்தது. இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்