தந்தையை கொலை செய்து துாங்கிய மகன்
சென்னிமலை:ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அடுத்த கொம்பனை கிராமத்தை சேர்ந்தவர் லிங்கப்பன், 68; கூலி தொழிலாளி. இவரது மூத்த மகன் பொன்னுச்சாமி, 42, மனைவியை பிரிந்து, தந்தையுடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வந்த பொன்னுசாமி, தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு, கழுத்தை நெரித்து கொன்றார். பின், தந்தை உடல் அருகே துாங்கி விட்டார். வெள்ளோடு போலீசார், லிங்கப்பன் உடலை மீட்டு, பொன்னுசாமியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.