உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன் தலைவராக தென்னரசு மீண்டும் தேர்வு

ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன் தலைவராக தென்னரசு மீண்டும் தேர்வு

ஈரோடு : ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேசன், 44-வது ஆண்டு மகா சபை கூட்டம் தலைவர் கே.எஸ்.தென்னரசு தலைமையில் நடந்தது. இதில், 2024-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் கே.எஸ்.தென்னரசு மீண்டும் தலைவராக தேர்வானார். ஏற்கனவே, 30 வருடங்களாக தலைவர் பதவியில் இருந்து வருகிறார்.துணை தலைவர்களாக ஜெகதீசன், கார்த்திகேயன், பி.டி.தங்-கவேல், செயலாளராக முருகானந்தம், இணை செயலாளர்களாக ஆனந்த், சபாபதி, சுரேஷ்குமார், பொருளாளராக நாகராஜன் இணை பொருளாளராக ராஜேந்திரன், செய்தி தொடர்பாளராக ரமேஷ், நிர்வாக குழு உறுப்பினர்களாக ஜோதிபாசு, சண்முகம், மணி, விவேகானந்தன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து நடந்த முதல் கூட்டத்தில், தொழிற்சாலைகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை செயல்படுத்த மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை