திருச்செந்துாருக்கு சிறப்பு பஸ்கள்
திருப்பூர், திருச்செந்துார் சுப்ரமணியசுவாமி கோவில், கந்தசஷ்டி விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக, சூரசம்ஹார வைபவம், நாளை (27 ம் தேதி) மாலை நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள், திருச்செந்துாரில் திரள்வர்.அவ்வகையில், திருப்பூரில் இருந்து திருச்செந்துார் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி வழியாக பத்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ் இயக்கம், இன்று காலை முதல் இரவு வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.