வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்
ஈரோடு:வரும், 2027 ஜன.,1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.இதன்படி ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 2,375 ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சேர்க்கை முதலாவது சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், 18 வயது நிரம்பியவர்கள், இதுவரை வாக்காளர்களாக சேராத இளைஞர்கள், எஸ்.ஐ.ஆர்., உள்ளிட்ட பிற காரணத்தால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோர் பயன் பெறலாம். முகாமில், 18 வயது நிரம்பிய இளைஞர்கள் ஆர்வத்துடன் படிவங்களை வழங்கினர். கருங்கல்பாளையம், எஸ்.கே.சி., சாலை உள்ளிட்ட இடங்களில் நடந்த முகாமை, மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் ஆய்வு செய்தார். வாக்காளர் சேர்க்கை முகாம் இன்று, 29ம் தேதியும் நடக்க உள்ளது.