உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்வாணியில் சிறப்பு கிராமசபா கூட்டம்

கீழ்வாணியில் சிறப்பு கிராமசபா கூட்டம்

பவானி: ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணி பஞ்.,ல், நேற்று சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி முன்னிலையில், சமூக தணிக்கையின் வட்டார வள அலுவலர் மோகன்குமார் மற்றும் நுாறுநாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள், 40 பேர் கலந்து கொண்டனர். நுாறு நாள் வேலை திட்டத்தில் இன்னும் ஊதியம் வரவில்லை. மேலும் வேலையும் தருவதில்லை. இந்த நிலையில், 125 நாளுக்கு எப்படி வேலை தருவீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். அடுத்த ஆண்டு முதல்தான், 125 நாள் வேலை இருக்கும். இது சம்பந்தமாக மத்திய, மாநில அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என, பதில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ