பெருந்துறை சாகர் பள்ளியில் விளையாட்டு விழா
பெருந்துறை:பெருந்துறை, சாகர் சர்வதேச பள்ளியில், 16வது விளையாட்டு விழா நேற்று நடந்தது.பள்ளி தாளாளர் சௌந்திரராஜன் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, அதை தவறாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். 2036ம் ஆண்டில் நம் பள்ளியின் இலக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதாக இருக்க வேண்டும். இந்தாண்டு சாகர் ஸ்போர்ட்ஸ் அகாடமி மூலம் சிறப்பாக விளையாடி சாதனை படைத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது,'' என்றார்.இந்திய மகளிர் தேசிய கூடைப்பந்தாட்ட அணி தலைவர் அனிதா பால்துரை சிறப்பாளராக பங்கேற்றார். மாணவர்கள் ஒலிம்பிக் சுடர் ஏற்றினர். மாணவ மாணவியரின் அணி வகுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.சாகர் அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம், பொருளாளர் பழனிசாமி, இணை செயலாளர் சாமிநாதன், முதல்வர் சீஜா, கல்வி இயக்குனர் ஐசக்பிரபுகுமார், சாகர் ஸ்போர்ட்ஸ் அகாடமி சிறப்பு பயிற்சியாளர் ராமன் விஜயன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.இந்தாண்டிற்கான சாம்பியன் பட்டத்தை பச்சை அணி பெற்றது. இறுதியில் பள்ளி மாணவர் தலைவர் பவின் நன்றி கூறினார்.