மேலும் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை கோரி கோவையில் அதிக மனுக்கள்
24-Jul-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 340 இடங்களில் முகாம் நடத்தி, மகளிர் உரிமைத்தொகை, பிற கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்று வருகின்றனர். நகரப்பகுதியில், 13 துறைகளிலும், கிராமப்புறங்களில், 15 துறைகளை சேர்ந்த கோரிக்கை தொடர்பாக மனுக்களை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று வரை, 36 இடங்களில் முகாம் நடத்தப்பட்டு, 16,965 மனுக்கள் பொது கோரிக்கை தொடர்பாகவும், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக, 17,985 மனுக்கள் என, 34,950 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில், பெயர் மாற்றம், வரி குறைப்பு போன்ற, 696 மனுக்களுக்கு மட்டும் உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
24-Jul-2025