வெள்ளகோவிலில் இன்று ஸ்டாலின் சிறப்பு முகாம்
வெள்ளகோவில், வெள்ளக்கோவில் புனித அமல அன்னை மகளிர் உயர்நிலைப் பள்ளியில், இன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் பல்வேறு வகை சிறப்பு மருத்துவ சேவை, பரிசோதனை, சிகிச்சை, ஆலோசனை வழங்கப்படும். மக்கள் பயன்படுத்திக் கொள்ள, திருப்பூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.