உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநில மூத்தோர் தடகளம்; 800 பேர் பங்கேற்பு

மாநில மூத்தோர் தடகளம்; 800 பேர் பங்கேற்பு

மாநில மூத்தோர் தடகளம்;800 பேர் பங்கேற்புஈரோடு, டிச. 29-மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில், 800 பேர் திறமைகளை வெளிக்காட்டினர்.தமிழ்நாடு மூத்தோர் தடகளம் சார்பாக, 39வது மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. மாநகராட்சி கமிஷனர் மனிஷ் துவங்கி வைத்தார். இதில், 1,000 மீட்டர் முதல் 5,௦௦௦ மீட்டர் வரையிலான நடை போட்டி, ஓட்டப்போட்டி, தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், சுத்தி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டி நடந்தது. போட்டிகளில், 30 வயதுக்கு மேற்பட்டோர், 800 பேர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. நாகர்கோவிலை சேர்ந்த, 97 வயது பன்ரோஸ் தடகள போட்டியில் பங்கேற்றார். இறுதிப் போட்டி, பரிசளிப்பு விழா இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ