மேலும் செய்திகள்
.குழந்தை இயேசு பேராலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம்
19-Apr-2025
ஈரோடு::ஈரோட்டில், புனித வெள்ளியை முன்னிட்டு, புனித அமல அன்னை தேவாலயத்தில் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வையும், அவர் சிலுவையில் உயிர் துறந்த நிகழ்வையும் நினைவுகூறும் நாளாக புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்துடன், மிக முக்கிய வழிபாடாக புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக கடந்த மார்ச், 5ல் சாம்பல் புதன் முதல், 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடித்து வருகின்றனர். கடந்த, 13ல் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்த்தி, நேற்று முன்தினம் இரவு இயேசுவின் கடைசி இரவு உணவு நிகழ்வை நினைவு கூர்ந்து, நற்கருணை நிலவும் வழிபாடும், நற்கருணை இடம் மாற்ற பவனி, நற்கருணை ஆராதனை நள்ளிரவு, 12:00 மணி வரை நடந்தது.நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு, புனித அமல அன்னை தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு, மவுன ஆராதனை, காலை, 6:00 முதல், 11:00 மணி வரை நடந்தது. பின் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூர்ந்து, சிலுவைப்பாதை வழிபாடும், மாலையில் சிறப்பு திருச்சிலுவை வழிபாடும் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.இன்று (19) இரவு, 9:30 மணிக்கு இயேசுவின் உயிர்ப்பு (ஈஸ்டர்) பெருவிழா, சிறப்பு திருப்பலி வழிபாடு துவங்குகிறது. நாளை (20) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதேபோல, ஈரோடு பிரப் நினைவு சி.எஸ்.ஐ., தேவாலயத்திலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.* புனித வெள்ளியை முன்னிட்டு, பவானி, அந்தியூர் பிரிவு அருகே உள்ள சி.எஸ்.ஐ.,தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.* அந்தியூர் அருகே, நகலுார் புனித செபஸ்தியார் சர்ச்சில், புனித வெள்ளியை முன்னிட்டு, சிலுவைப்பாதை ஊர்வலம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிலுவைப்பாதை ஊர்வலத்தில் பங்கேற்ற, 50க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், இயேசுவை நினைவு கூர்ந்து, சிலுவையை சுமந்து, நகலுாரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல், அந்தியூர் சி.எஸ்.ஐ., சர்ச்சிலும் சிலுவைப்பாதை பிரார்த்தனை நடந்தது. மேலும் புதுப்பாளையம், சங்கராப்பாளையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது.
19-Apr-2025