மேலும் செய்திகள்
நீர்மட்டம் சரிவு
22-Sep-2024
Century அடித்த Pant & Gill Day3 IndvsBan 1stTest
21-Sep-2024
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து, காளிங்கராயன் பாசனத்துக்கு திறக்கப்பட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.பவானிசாகர் அணை மொத்த நீர்மட்டம், 105 அடி; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. கடந்த ஆக.,15 முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனம், அரக்கன்கோட்டை தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு, 2,300 கன அடி நீர், அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு, 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காளிங்கராயன் பாசனத்துக்கு திறக்கப்பட்ட, 100 கனஅடி தண்ணீர், நேற்று முதல் நிறுத்தப்பட்-டது.அதேசமயம் கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி நீர், அரக்-கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு, 800 கன அடி நீர்; குடிநீர் தேவைக்காக, 100 கன அடி தண்ணீர் என மொத்தம், 3,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, 581 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 89.97 அடி; நீர் இருப்பு, 21.5 டி.எம்.சி.யாக இருந்தது.
22-Sep-2024
21-Sep-2024