சென்னிமலையில் மீண்டும் தெரு நாய்கள் அட்டகாசம்
சென்னிமலை, சென்னிமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மாதமாக தெருநாய் தொல்லை இல்லாத நிலையில், மீண்டும் அட்டகாசத்தை தொடங்கி விட்டன. சென்னிமலை யூனியன் ஓட்டப்பரை ஊராட்சி, இச்சிப்பட்டி ஆதி திராவிடர் காலனி கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில், நேற்று முன்தினம் இரவு புகுந்த நாய்கள் கடித்ததில், இரு ஆடுகள் பலியாகி விட்டன. நான்கு ஆடுகள் படுகாயம் அடைந்தன. மூங்கில் தப்பையை கொண்டு உறுதியாக பட்டி அமைத்துள்ளார். அதையும் கடித்து தெருநாய்கள் உள்ளே புகுந்துள்ளது, ஆடு வளர்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.