தெருநாய்கள் மீண்டும் அட்டகாசம்; 4 ஆடுகள் பலி
சென்னிமலை:சென்னிமலை அருகே மீண்டும் தெருநாய்கள் பட்டியில் புகுந்து கடித்ததில் நான்கு ஆடுகள் பலியாகின.சென்னிமலை யூனியன் வாய்ப்பாடி ஊராட்சி பெரிய காட்டுபாளையம், தலையாரி காடு பகுதியில் வசிப்பவர் முத்துசாமி, 67; தோட்டத்தில் பட்டி அமைத்து, 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பட்டிக்குள் புகுந்து தெருநாய்கள் கடித்ததில், நான்கு ஆடுகள் இறந்து விட்டது. மூன்று ஆடுகளை காணவில்லை. ஆறு ஆடுகள் படுகாயம் அடைந்து விட்டன. தெருநாய்களால் மீண்டும் ஆடுகள் பலியானது, ஆடு வளர்ப்போர்கள் மத்தியில், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.