மேலும் செய்திகள்
சகோதரிகள் உள்பட நான்கு பேர் மாயம்
26-May-2026
பவானி:திருநல்வேலி, காவல்கிணறை சேர்ந்தவர் ஆஷா பிரீத்தி, 19; நசியனுாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சிக்காக வந்துள்ளார். அவருடன் தங்கையும் இருந்துள்ளார். இந்நிலையில் ஆஷா பிரீத்தி நேற்று முன்தினம் காலை மாயமாகி விட்டார். அவரது தாய் புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.* கோபி அருகே பொலவக்காளிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவசங்கர், 21; வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் மகேஸ்வரி புகாரின்படி கோபி போலீசார் தேடி வருகின்றனர்.* சித்தோடு அருகே ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிசாமி, 53; லாரி டிரைவர். இவரின் மகள் தேன்மொழி, 23; திண்டலில் ஒரு துணிக்கடையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மாரிசாமி புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
26-May-2026