மேலும் செய்திகள்
செய்யூர் அரசு கல்லுாரிக்கு நிலம் ஒதுக்கீடு
27-Apr-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 6 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணைய வழி விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளான சத்தியமங்கலத்தில்-570 இடங்கள், திட்டமலை-450, மொடக்குறிச்சி-475, அந்தியூர்-280, தாளவாடி-300, ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 474 இடங்கள் உள்ளன. அனைத்து அரசு கல்லுாரிகளிலும் கல்வி கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு புதுமை பெண் தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. சேர்க்கைக்கு www.tngasa.inஎன்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது அந்தந்த கல்லுாரி உதவி மையங்களை அணுகலாம். விண்ணப்ப கட்டணம், 48 ரூபாய், பதிவு கட்டணம், 2 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. பதிவு கட்டணம், 2 ரூபாய் செலுத்த வேண்டும். இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
27-Apr-2025