2,000 பனை விதைகளை நடவு செய்த மாணவர்கள்
பெருந்துறை:தமிழக அரசின் பசுமை பள்ளி திட்டத்தில், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமை படையை சார்ந்த, 50 மாணவர்கள், துடுப்பதியில் உள்ள ஓடைக்கரையில், 2,000 பனை விதைகளை நேற்று நடவு செய்தனர். துடுப்பதி பஞ்., மிஷன் சம்ரிதி பொறுப்பாளர் பவித்ரா மற்றும் முன்னாள் பஞ்., தலைவர் கவிதா ஆகியோருடன் இணைந்து பனை விதைகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.