உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணை சுகாதார நிலையம் திறப்பு

துணை சுகாதார நிலையம் திறப்பு

பவானி, நவ. 22-பவானி நகராட்சி மண் தொழிலாளர் வீதியில் கட்டப்பட்ட, துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், பல்வேறு இடங்களில் கட்டப் பட்ட துணை சுகாதார நிலையங்களை, தாளவாடியில் இருந்து நேற்று, வீடியோ கான்பரன்சிங்கில் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை, பவானி நகர்மன்ற தலைவர் சிந்துாரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் மாணிக்கவேல், தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், நகராட்சி கமிஷனர் மோகன்குமார் மற்றும் மருத்துவ பணியாளர், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை