உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய வங்கிகளில் மானிய கடனை ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும்

தேசிய வங்கிகளில் மானிய கடனை ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும்

'தேசிய வங்கிகளில் மானிய கடனை ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும்'ஈரோடு, டிச. 29-ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:கூட்டத்தில் விவசாயிகள், சங்க நிர்வாகிகள் பேசியதாவது: மேட்டூர் வலது கரை பாசனத்தில், கடந்த முறை கடைமடைக்கு தண்ணீர் வருவதில் சிரமம் இருந்தது. அடுத்த பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன், துார்வார வேண்டும். நெல் அறுவடையின்போது, மானியத்தில் அறுவடை இயந்திரம் வழங்க வேண்டும்.கீழ்பவானி வாய்க்காலில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம், செடி, கொடிகளை அகற்ற வேண்டும். கீழ்பவானி பாசனத்துக்கு கூடுதல் நாள் தண்ணீர் திறப்பையும், இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பையும் அறிவிக்க வேண்டும்.வாய்க்கால், ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சட்ட விரோத தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும். நீர் நிலையில் பொதுப்பணித்துறை இடங்களில், தென்னை மரங்களை வைத்து ஆக்கிரமித்துள்ளதை தடுக்க வேண்டும்.தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் தனி நபர் பயிர் கடன், 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியதற்கு நன்றி. தேசிய வங்கிகளில் மானிய கடனை, 3 லட்சத்தில் இருந்து, 6 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியை தடுக்க, அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கீழ்பவானி இரண்டாம் போக பாசனத்துக்கு, தண்ணீர் திறப்பு தேதியை முன்னதாக அறிவிக்க வேண்டும். முதல் போகத்துக்கு கூடுதல் நாள் தண்ணீர் திறக்க வேண்டும்.நீர் வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி: கீழ்பவானி பாசனம், இரண்டாம் போகத்துக்கு ஜன., 10 முதல் தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் போகத்துக்கு ஜன., 3 வரை தண்ணீர் திறக்கும் நாளை நீட்டிக்கவும் பரிந்துரைத்துள்ளோம். பாசன சபைக்கான தேர்தல் குறித்த விபரங்களை, அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளோம். கீழ்பவானி வாய்க்காலை ஆக்கிரமித்து, நீர் வளத்துறை இடத்தில் வைக்கப்பட்ட, 173 தென்னை மரங்கள் அரசுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் அகற்றப்படும்.காளிங்கராயன் வாய்க்காலில் தற்போதுதான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், செடி, கொடிகள் மிதக்கிறது. மொத்தம், 100 கி.மீ., துாரம் என்பதால், அவற்றை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை