உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தியமங்கலத்தில் திடீர் மழை

சத்தியமங்கலத்தில் திடீர் மழை

சத்தியமங்கலம்,:சத்தியமங்கலம் பகுதியில் திடீரென மழை பெய்தது.சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. திடீரென மாலை 5:45 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. 1 மணி நேரம் வரை மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வழிந்தோடியது. நகர பகுதியில் ஆங்காங்கே பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்கள், குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய குழிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. வடக்கு பேட்டை பகுதியில் உள்ள சாலைகளில், மழை நீர் தேங்கியதால் நடந்து செல்வோர் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்