சத்தியில் பவானி ஆற்றில் ஆகாயதாமரையால் அவதி
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் வரசித்தி விநாயகர் கோவிலை ஒட்டி, பவானி ஆறு செல்கிறது. இப்பகுதி முழுவதும் ஆகாயத்தாமரை, செடி, கொடி படர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் விஷ ஜந்து அதிகளவில் நடமாடி வருகிறது. இப்பகுதியில் படித்துறை இருப்-பதால் துணி துவைக்க, குளிக்க வரும் மக்கள் அச்சத்துக்கு ஆளா-கின்றனர். சாக்கடை கழிவுநீரும் கலப்பதால் துர்நாற்றம் வீசி, குளிக்க வரும் மக்களை விரட்டுகிறது. ஆகாயத்தாமரைகளை அகற்ற மக்கள் எதிர்பார்க்கின்றனர்.