தொழிலாளி தற்கொலை
பவானி: சித்தோடு அருகேயுள்ள கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் சதீஷ்-குமார், 33; திருமணமாகி, மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். கட்டட பணியில் கம்பி கட்டும் வேலைக்குச் சென்று வந்தவர், சீட்டு போட்டு வந்துள்ளார். சரிவர வேலை இல்லாததால் சீட்டு பணம் கட்ட முடியாமல் பைனான்ஸில் வாங்கி கட்டியுள்ளார். இந்நிலையில் பைனான்ஸுக்கு பணத்தை கட்ட முடியாத நிலையில், சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்-றனர்.