உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூசாரிகளுக்கு கோவில் மாடுகள் வழங்கல்

பூசாரிகளுக்கு கோவில் மாடுகள் வழங்கல்

சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கோசாலையில், உபரியாக இருந்த, 35 மாடுகளை, கிராம கோவில்களில் ஒருகால பூஜை திட்டத்தில் பணியாற்றும் பூசாரிகளுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். மேலும், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். முன்னதாக சென்னிமலை மலைக்கோவிலில், 61 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் திறந்து வைத்தார். இதிலும் அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார். நிகழ்வுகளில் அமைச்சருடன் எம்.பி., பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் செல்வம், ஒன்றிய தி.மு.க., செயலாளர் பிரபு, கோவில் செயல் அலுவலர் யுவராஜீ மற்றும் கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி