உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் நீர்மட்டம் 102 அடியை எட்டினால் உபரி நீர் திறக்கப்படும்

பவானிசாகர் நீர்மட்டம் 102 அடியை எட்டினால் உபரி நீர் திறக்கப்படும்

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணை நீர்மட்டம் கடந்த, 27ல், 100 அடியை எட்டியது. அணையின் மொத்த நீர்மட்டம், 105 அடி என்றாலும், பாதுகாப்பு விதிமுறைப்படி, ஜூலை மாத இறுதி வரை, 100 அடி வரை மட்டுமே நீர் தேக்க முடியும். இதனால், 100 அடியை எட்டியதும் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.இந்நிலையில் ஆக., மாதம் முதல் அக்., வரை அணையில், 102 அடி வரை நீர் தேக்க விதிமுறை உள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் உபரி நீர் நிறுத்தப்பட்டு, 102 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம், 101.04 அடியாக இருந்தது. நீர்வரத்து, 6,739 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், ௧௦௨ அடியை தொட்டவுடன், அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படும் என்று, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை